தேனி: வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு 120 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். முல்லை பெரியார் ஒருபோக பாசன பகுதிகளுக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. 1,130 கன அடி வீதம் மொத்தம் 120 நாட்களுக்கு 8,493 மி.க. அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
+
Advertisement