Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண பிரம்மோற்சவ திருவிழா

காஞ்சிபுரம்: சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமான காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களில் உலக பிரசித்தி பெற்று விளங்கும், வழக்குகள் அனைத்தையும் நடுவாய் நின்று தீர்த்து வைக்கும் ஈசன் என்று பெயர் பெற்று விளங்கும் ஸ்ரீ மருகுவார் குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் ஆனி உத்திரத் திருக்கல்யாண பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவம் கொடியேற்ற விழாவை முன்னிட்டு வழக்கறுத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே சாமியை எழுந்தருளச் செய்தனர்.

பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க செம்பு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, நந்தி உருவம் பொறிக்கப்பட்ட கொடியினை மேளதாளம் வாத்தியங்கள் முழங்க கோயில் அர்ச்சகர்கள் செம்பு கொடி மரத்தை ஏற்றி வைத்து பிரம்மோற்சவ திருவிழாவை தொடங்கி வைத்தனர். கொடியேற்ற உற்சவத்தில் கோயில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு, உபயதாரர்கள் வள்ளிநாயகம் சோமசுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.