சென்னை: ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தன்னிடம் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.21.78 கோடி தொகையாக வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், வழக்கு வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
+
Advertisement

