லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். மீரட் மாவட்டத்தில் உள்ள முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த ஷாகித் (35) என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கொள்ளை வழக்குகளில் தலைமறைவான ஷாகித்தை போலீசார் தேடி வந்தனர். பாக்பத் மாவட்டத்தில் ஷாகித்தை பிடிக்க சென்றபோது தாக்கி விட்டு தப்ப முயன்றதால் போலீசார் சுட்டதில் உயிரிழந்தார்.
+
Advertisement