டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வனத்துறை ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடந்த விழாவில் ரூ.8260 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடக்கி வைத்தும் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசுகையில்,‘‘ மக்கள் தொகை மாற்றங்கள், பொது சிவில் சட்டம், மத மாற்றங்களை தடுப்பது போன்ற விஷயங்களில் உத்தரகாண்ட் அரசு தேசிய நலனை காக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதல்வர் புஷ்கர்சிங் தாமிக்கு பாராட்டுகள். அடுத்த சில ஆண்டுகளில் உலகின் ஆன்மீகத் தலைநகராக மாநிலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்’’ என்றார்.
+
Advertisement

