Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாப்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 பக்தர்கள் ரயில் மோதி உயிரிழப்பு..!!

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாப்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 பக்தர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கார்த்திக் பூர்ணிமாவை ஒட்டி கங்கை நதியில் புனித நீராடுவதற்காக காலை 9.15 மணியளவில் கோமோ-பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸில் இருந்து இறங்கி, தவறான பக்கத்திலிருந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ​​மூன்றாவது பிளாட்ஃபார்ம் வழியாகச் செல்லும் ஹவுராவில் இருந்து கல்கா சென்றுகொண்டிருந்த கல்கா விரைவு ரயில், பக்தர்கள் மீது மோதியது.

உயிரிழந்த பக்தர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.சத்தீஸ்கரில் நேற்று நடந்த ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் இத்தகைய சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.