அலகாபாத்: உத்தரப்பிரதேசத்தில் ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உ.பி. அரசு ஜாதி ரீதியிலான கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. காவல் நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாதி, போலீஸ் ஆவணங்களில் பதிவு செய்யப்படக் கூடாது. புதிய உத்தரவின்படி வாகனங்களில் ஜாதியை வெளிப்படுத்தும் வாசகங்கள், ஸ்டிக்கர்கள் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். குற்றத்தடுப்பு மற்றும் கண்காணிப்பு இணையதளத்தில் ஜாதி தொடர்பான விவரம் குறிப்பிடும் பகுதியை நீக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உ.பி. அரசின் தடை உத்தரவுக்கு சமாஜ்வாதி உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
+
Advertisement