Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உ.பி.யில் 10 நாட்களில் 20 என்கவுன்ட்டர்: ‘ஆபரேஷன் லங்கடா’ நடவடிக்கையில் 10 பேர் உயிரிழப்பு!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் கடந்த 10 நாட்​களில் நடை​பெற்ற 20 என்​க​வுன்ட்​டர்​களில் 10 முக்​கிய குற்றவாளிகள் கொல்​லப்​பட்​டுள்​ளனர். பாஜக​ ஆளும் உத்தரப் பிரதேசத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக ‘ஆபரேஷன் லங்​க​டா’ எனும் பெயரில் முக்​கிய குற்​ற​வாளி​களை பிடிக்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது. இந்​நிலை​யில் கடந்த 10    நாட்​களில் நடை​பெற்ற 20 என்​க​வுன்ட்​டர்​களில் 10 முக்​கிய குற்​ற​வாளி​கள் கொல்​லப்​பட்​டுள்​ளனர்.

கொல்​லப்​பட்​ட​வர் பட்​டியலில் ரூ.2.5 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட வினீத் பாட்​டி, ரூ.1 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட இப்​த​கார், இம்​ரான், அர்ஷத், நயீம் ஆகியோ​ரும் உள்​ளனர். பாலியல் வன்கொடுமை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட பலரை அம்மாநில போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்துள்ளனர். கடந்த 8 ஆண்​டு​களில் உ.பி. காவல்​துறை 14,973         என்​க​வுன்ட்​டர்​களை நடத்​தி​யுள்​ளது. இதில் 239 பேர் கொல்​லப்​பட்​டுள்​ளனர்.

உ.பி.​யின் கவு​சாம்பி மாவட்​டத்​தில் 3 நாட்​களுக்கு முன் புது​மணப் பெண் ஒரு​வர் கழுத்து அறுத்து

கொல்​லப்​பட்​டார். இந்த கொடூர சம்​பவத்​தில் 48 மணி நேரத்​தில் அவரது காதலன் பால்​வீர் காலில்          சுடப்​பட்டு கைது செய்​யப்​பட்​டார்.ராபர்ட்​ஸ்​கஞ்ச் மாவட்​டத்​தில் கடந்த 8-ம் தேதி ஒரு பெண்​ணிடம்    கொள்​ளை​யடித்து அவரை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக 3 பேர் மீது குற்​றம் சாட்​டப்​பட்​டது. மறு​நாள் இந்த மூவரும் என்​க​வுன்ட்​டரில் கைது செய்​யப்​பட்​டனர். பரேலி​யில் ரூ.1 லட்​சம் வெகுமதி     அறிவிக்​கப்​பட்ட காஸ்​கஞ்​சின் இப்​த​கார், கடந்த 8-ம் தேதி என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்​டார். இவரது மரணம்  குற்​ற​வாளி​கள் மத்​தி​யில் அச்​சத்தை  ஏற்​படுத்​தி​யுள்​ளது.