Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அழுவதுபோல் நடித்த உத்தமரா இன்று அழுகையை பற்றி பேசுவது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை

சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ெபாய்யாமொழி வெளியிட்ட அறிக்கை: கரூர் சம்பவத்திற்கு ஆணையத்தை அரசு அமைத்ததை ஐவாஷ் ஆணையம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அமைக்கப்பட்டிருக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தைதான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது அமைத்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பழனிசாமியின் கண் மூடியிருந்ததா? ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவரும் எடப்பாடி பழனிசாமிதான். ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்தது கூட (Eyewash) ஐவாஸ்-தானா?

சமூக ஊடகங்களில் எந்தமாதிரியான சதிக் கோட்பாட்டுக் கதைகள் பரவி வருகின்றன என்பது தெரியாதா? உங்கள் கட்சியின் ஐடி விங்கிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் இறந்த போதும் என்னவெல்லாம் நாடகம் ஆடினீர்கள்? பிறகு ஆர்.கே. நகர் தேர்தலில் இறந்த உங்களுடைய தலைவர் உடல் போன்ற சித்தரிக்கப்பட்ட பொம்மையை வைத்து பரப்புரை செய்தீர்கள். பொம்மையை வைத்து அரசியல் செய்த வரலாற்றை எழுதியவர்கள் தானே நீங்கள் இதுபோன்ற நாடகங்களை நடத்திப் பழக்கப்பட்ட உங்களுக்கு எல்லாமே போட்டோஷூட்டாக தெரியும்.

பிணங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு உண்மையான அக்கறை வெளிப்படாது. அமைச்சர் ஒருவர் அழுவது போல நடிக்க தெரியாமல் மாட்டிக்கொண்டார் எனச் சொல்லியிருக்கிறார். இதே செப்டம்பர் 29ம் தேதி 11 ஆண்டுகளுக்கு முன்பு அழுகாச்சியோடு ஓர் அமைச்சரவை பதவியேற்பு நாடகம் நடந்தது பழனிசாமிக்கு தெரியுமா? சொத்துக் குவிப்பு வழக்கில் 2014ல் நீதிபதி குன்ஹா தீர்ப்பால் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். அதனால், பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கண்ணீரோடு பதவியேற்றது. அப்போது அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது?. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* அன்புமணி பேச்சை பொருட்படுத்த வேண்டாம்

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குறித்து பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ள கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது: அன்புமணி நாகரிகமற்று கொச்சையாக பேசியிருக்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்கு செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சுக்குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராகவும் கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன். எங்கள் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல, ‘‘எந்த தலைவரும் தன் ஆதரவாளர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்’’. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம். ஆறுதல் சொல்கிறோம். வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையைக்கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்ைத இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்று கருகிறேன்.