அமெரிக்கா: ஹெச் 1 பி விசாக்களுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஹெச்.1 பி விசா தரப்படுகிறது. ஹெச் -1பி விசா மூலம் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர்.
அமெரிக்காவின் ஹெச் 1 பி விசா பெற இனி ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும். செப். 21 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய உத்தரவு, அடுத்த 12 மாதங்களுக்கு செயலில் இருக்கும். உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும். வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இது செயல்படுத்தப்படுகிறது.
ஹெச்-1 பி விசாக்களை பயன்படுத்தும் நாடுகளில் 71 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஹெச்-1 பி விசா கட்டண உயர்வால் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும் என இந்தியர்களின் கனவும் தகரும் நிலை ஏற்பட்டுள்ளது.