Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயனுள்ள இணையதளங்கள்

இந்தப் பகுதியில் வழங்கப்படும் இணையதள முகவரிகளின் மூலம் தொழில்நுட்பப் பயிற்சி, தொழில்முனைவோர் பயிற்சி, தொழில் தொடங்க ஆலோசனை, உயர்கல்விக்கு வழிகாட்டும் இணையதளங்கள், உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு இணையதளச் சேவைகளைத் தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அலுவலகம், சென்னை msmedi-chennai.gov.in/GARMS_Admin/TrainingProgrammeTa.aspx

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி அலுவலகம் (எம்.எஸ்.எம்.இ - வளர்ச்சி அலுவலகம்) சென்னை, 1954ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய அரசின் எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் கீழ் உள்ள மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள அலுவலகமாகும். இது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் எம்.எஸ்.எம்.இ. துறையின் தேவைகளைக் கவனிக்கிறது. எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டு அமைப்பு, இந்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. அமைச்சகத்தின்கீழ் உள்ள மேம்பாட்டு ஆணையர் தலைமையில் செயல்படுகிறது. இது ஒரு அரசு அமைப்பாகவும், நாட்டின் குறு,, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு உரிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க, ஒருங்கிணைக்க மற்றும் கண்காணிக்கும் அமைப்பாக உள்ளது.குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி அலுவலகம் சென்னை மற்றும் கிளை அலுவலகம் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலியில் உள்ள பணியக மையம் ஆகியவை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தொழில்நுட்ப-மேலாண்மைச் சேவைகள், பயிற்சித் தேவைகள், பொதுவான வசதி பணியகம், ஆய்வகங்கள், புள்ளியியல் மற்றும் பொருளாதாரத் தகவல்களை வழங்கும் முழுமையான சேவைகள் மற்றும் வசதிகளை வழங்குகின்றன. இந்த அலுவலகத்தில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெட்டலர்ஜி, கெமிக்கல், உணவு, கண்ணாடி மற்றும் சிராமிக், தோல், துணிகள், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைகளில் அனுபவமுள்ள அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் வணிகம், மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப-பொருளாதாரத் தொடர்பான சேவைகளில் வாடிக்கையாளர்களுக்கும், எம்.எஸ்.எம்.இக்கும் மதிப்பு சேர்க்கும் வகையில் சேவைகளை வழங்குகிறார்கள். பல்வேறு ஆலோசனை மற்றும் ஆதரவுச் சேவைகளை வழங்குவதுடன், அலுவலகம் எதிர்கால மற்றும் தற்போதைய தொழில்முனைவோர்களுக்கான தொழில்முனைவு, தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பயிற்சித் திட்டங்களை எம்.எஸ்.எம்.இ. நடத்துகிறது.

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (https://upsc.gov.in)

இந்திய அரசுப் பணிகளுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission அல்லது UPSC) ஆகும். இவ்வமைப்பு மத்திய அரசின் பல அரசுத் துறைகளின் பணிகளுக்கான பணியாளர்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்று அவர்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேரடித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்து கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

இந்திய ஆட்சிப் பணி,இந்தியக் காவல் பணி, இந்திய வெளிநாட்டுப் பணி போன்ற பணிச்சேவைகளை ஒழுங்குபடுத்தி அப்பணியாளர்களின் பணிக்கால வாழ்வு, பயிற்சி மற்றும் சேவைவிதிகளைக் கட்டுப்படுத்தி வருகிறது. பல்வேறு பணிச்சேவைகளுக்கு மற்றும் பணியிடங்களுக்குப் பணியாளர்களை போட்டித்தேர்வுகள் நடத்தி தேர்ந்தெடுத்தல், மத்திய அரசின் பல்வேறு பணிச் சேவைகளுக்கு மற்றும் பணியிடங்களுக்கு பணியாளர்களை நேர்முகத்தேர்வுகள் நடத்தி தேர்ந்தெடுத்தல், பணி உயர்வு மற்றும் வேற்றுப்பணிக்கு மாற்றங்களில் அதிகாரிகளின் தகுதி குறித்து அரசுக்கு பரிந்துரைத்தல், பல்வேறு பணிச்சேவைகள் மற்றும் பணியிடங்களுக்குப் பணியமர்த்துவது குறித்து அனைத்து விஷயங்களிலும் அரசுக்கு ஆலோசனை வழங்கல், பல்வேறு அரசுப்பணிச் சேவைகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, சிறப்பு ஓய்வூதியம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இந்த அமைப்பின் இணையதளப் பக்கத்தில் மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான தேர்வு குறித்த அறிவிப்புகள், எந்தெந்த துறைகளில் எத்தனை காலியிடங்கள் உள்ளன, ஆட்சேர்ப்புக்கான விளம்பரங்கள், தேர்வு சார்ந்த பல்வேறு இணையதளப் பக்கங்களின் லிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரகம் WWW.employmentexchange.tn.gov.in/about_ta.html

வேலைவாய்ப்புகளை வழங்கும் அனைத்து இணையதளங்களையும் இணைத்து வேலை தேடுபவர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தொடர்ச்சியான ஆலோசனைகளை வழங்கி அவர்களின் விருப்பமான வேலைகளைப் பெற உதவும் தளம். இந்த இணையதளத்தில் முகப்புப் பக்கத்தில் வேலை நாடுநர் என்ற தலைப்பில் அரசு/பொதுத்துறை வேலைவாய்ப்பு, தனியார் துறை வேலை வாய்ப்பு, போட்டித் தேர்வுகள், திறன் பயிற்சி போன்ற பிரிவுகளும், வேலை யளிப்பவர் என்ற தலைப்பில் தனியார் துறை, அரசுத்துறை என்ற வகையிலும், வேலை நிலவரத் தகவல், தொழில்நெறி வழிகாட்டல், தொடர்புகொள்வதற்கான இயக்குநரகம், தொலைபேசி எண்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டிருக்கும்.