Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகர் சுட்டுக்கொலை: வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது விபரீதம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டதில் ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் (37) (Johnny Wactor). இவர் ஜெனரல் ஹாஸ்பிடல் (General Hospital) என்ற படத்தில் நடித்ததற்காக நல்ல வரவேற்பை பெற்றார்.

அதனைத்தொடர்ந்து சைபீரியா, கிரிமினல் மைண்ட் ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். திரைப்படங்களில் மட்டுமல்லாது ஹாலிவுட் நெடுந்தொடர்களிலும் இவர் நடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இவர் தனது வீட்டில் நண்பருடன் இருந்த நிலையில் அச்சமயம் 3 பேர் கும்பல் ஒன்று, இவரின் காரில் இருந்த கருவியை திருட முயன்றது.

அச்சமயம், திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டதில் நடிகர் உயிரிழந்தார். உடனடியாக நடிகரை மீட்ட அவரின் நண்பர், படுகாயங்களுடன் இருந்த நடிகர் ஜானி வாக்டரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் அத்தகைய கும்பலை பிடிக்க வலைவீசி வருகிறது.