நியுயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் நேற்று கோலாகலமாக துவங்கின. மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில், பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகனு அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகனு (22), ஜப்பான் வீராங்கனை எனா ஷிபாஹரா (27) மோதினர்.
இப்போட்டியின் துவக்கம் முதல் ராடுகனுவின் ஆதிக்கமே காணப்பட்டது. ஆக்ரோஷமாக ஆடிய அவர் முதல் செட்டை, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ராடுகனு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய அவர், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார். அதையடுத்து, 2வது சுற்றுக்கு ராடுகனு முன்னேறினார்.