வாஷிங்டன்: அமெரிக்க அரசு செலவினங்கள் தொடர்பான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்படும். கடந்த 1ம் தேதி அமெரிக்க செனட் சபையில் நிதி மசோதா தோல்வி அடைந்தது. இதனால், கடந்த 38 நாள்களாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது. இந்நிலையில் குடியரசு கட்சியினர் கொண்டு வந்த செலவு மசோதா ஜனநாயக கட்சியை சேர்ந்த 8 எம்பிக்கள் ஆதரவுடன் அமெரிக்க செனட் சபையில் நேற்று முன்தினம் நிறைவேறியது.
அடுத்தக்கட்டமாக செலவின மசோதா பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு தேவையான 60 சதவீத வாக்குள் இருப்பதால் மசோதா எளிதில் நிறைவேறும். அதன்பிறகு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளிப்பார். இதனால் அமெரிக்க அரசு முடக்கம் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
