சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்த மின்னஞ்சலில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தேனாம்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தூதரகத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அது புரளி என தெரியவந்தது. தி.நகர் சவுத் போக் சாலையில் உள்ள நடிகர் பிரபு வீடு, மந்தவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதுவும் புரளி என தெரிந்தது. இதையடுத்து தேனாம்பேட்டை, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் மற்றும் அபிராமபுரம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து சைபர் க்ரைம் உதவியுடன் மர்ம நபரை தேடி வருகின்றனர். கடந்த 2 மாதத்தில் 50க்கும் மேற்பட்ட முறை வெளிநாடுகளில் இருந்து மர்ம நபர் ஒருவர் பல்வேறு பிரபலங்கள் பெயரில் மின்னஞ்சல் உருவாக்கி தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகிறார். அவரை பிடிக்க சென்னை பெருநகர காவல்துறை மற்றும் மாநில சைபர் க்ரைம் போலீசார் உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிக்குழு மிரட்டல் விடுத்து வரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
+
Advertisement
