திருப்பூர்: அமெரிக்க வரி விதிப்புக்கு நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக திமுக எம்.பி. ஆ.ராசா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன், சு.வெங்கடேசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
+
Advertisement