திருப்பூர்: அமெரிக்காவின் வரி விதிப்பால் திருப்பூரில் ரூ.15,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுவதாக ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அமெரிக்காவுக்கு அனுப்ப தயாரான ஆடைகள் திருப்பூரில் தேக்கமடைந்துள்ளதாகவும், எந்தவித அவகாசமும் கொடுக்காமல் வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர். தொழில்களையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடி நிவாரண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
+
Advertisement