சென்னை: அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் ரூ.1,000 கோடி அளவுக்கு இறால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 80க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளன. இறால் பண்ணைகளில் இருந்து பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்கு மட்டும் 60% வரை இறால் ஏற்றுமதி செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பால் ரூ.1,000 கோடி அளவுக்கு இறால் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளது. இறால் தேக்கம் அடைந்து வந்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
+
Advertisement