அமெரிக்க அதிபர் உடல்நிலை குறித்த வதந்திகள்; யூகங்களை நிராகரித்து தான் வாழ்க்கையில் ஒரு போதும் நன்றாக இருந்தது இல்லை: டிரம்ப் விளக்கம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபராக பதவியேற்றிருக்கும் டிரம்புக்கு 79 வயதாகும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இஸ் டிரம்ப் டெத்? டிரம்ப் டெத் என்ற ஹாஷ்டாகுகள் ட்ரெண்டாகி வருகின்றன. இதனை அடுத்து அமெரிக்க அதிபர் மாளிகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு டிரம்ப்பின் உடல்நிலை குறித்து விலக்கி உள்ளது. டிரம்ப் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாகவும் கோல்ப் மைதானத்தில் விளையாடி கொண்டிருப்பதாகவும் பதிவிட்டது. மேலும்,ஜே.டி வான்ஸ் விளக்கமும் அளித்திருந்தார்.
இரவில் தொலைபேசி அழைப்புகளை செய்யும் கடைசி நபர் அவர் தான். காலையில் எழுந்ததும் முதலில் தொலைபேசி அழைப்புகளை செய்யும் முதல் நபர் அவர் தான். அமெரிக்க ஜனாதிபதி நல்ல நிலையில் உள்ளார். மீதமுள்ள பதவிக்காலத்தை நிறைவேற்ற போகிறார். அமெரிக்க மக்களுக்கு சிறந்த காரியங்களை செய்வார் என்றும் நான் மிகவும் நம்பிக்கையுடன் உணர்கிறேன் என்று பேசினார். மேலும், truth சோசியல் பதிவொன்றில் ஜோ பைடன் பல நாட்கள் தோன்றாமல் இருப்பார் ஊடகங்கள் அவரை ஷார்ப் மற்றும் டாப் ஆஃப் இஸ் கேம் என்று கூறும்.
இதற்கிடையில் அவர் டயப்பர்களை அணிந்துகொண்டு தூங்கி கொண்டிருந்தார். அமெரிக்க வரலாற்றில் வேறு எந்த அதிபர்களை விடவும் டிரம்ப் அதிக பொது வேலை நேரங்களை செலவிடுகிறார் என்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கு டிரம்ப் truth சோசியல் பக்கத்தில் பதில் பதிவிட்டிருந்தார். அதில் உடல்நிலை குறித்த யூகங்களை நிராகரித்து தான் வாழ்க்கையில் ஒரு போதும் நன்றாக இருந்தது இல்லை. நெவர் பெல்ட் பெட்டெர் என்று குறிப்பிட்டார். வாஷிங்டன் டீசி குற்றமில்லாத மண்டலமாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.