அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு 5.25 லட்சம் பீப்பாய்களாக அதிகரிப்பு: உலக எண்ணெய் வர்த்தக ஆய்வு நிறுவனம் தகவல்
அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு 5.25 லட்சம் பீப்பாய்களாக அதிகரித்துள்ளதாக உலக எண்ணெய் வர்த்தக ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மிரட்டலால் ரஷ்ய கச்சா எண்ணெய் குறைப்பு
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதால் இந்திய பொருட்கள் மீது வரி உயர்த்தப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார். அமெரிக்காவின் மிரட்டலை அடுத்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்க இந்தியா முடிவு செய்தது. ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட், லூக் ஆயில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதிக்கும் முன்பே இந்திய நிறுவனங்கள் முடிவு செய்தது. அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியாவுக்கு வர 45-55 நாள் ஆகுமென்பதால் முன்பே இந்தியா ஒப்பந்தமிட்டது. சீனாவின் எண்ணெய் தேவை சரிந்ததால், அமெரிக்க எண்ணெய் விலை குறைந்ததால் இந்திய நிறுவனங்கள் அதை வாங்க முடிவு செய்தது.
அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்பந்தம்
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதை அடுத்து அமெரிக்காவிடம் வாங்குவது அதிகரித்துள்ளது. நவம்பரில் சராசரியாக நாளொன்றுக்கு 4.5 லட்சம் பீப்பாய்கள் வரை அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்பந்தமிட்டுள்ளது. 2022 ல் தினசரி 3 லட்சம் பீப்பாயாக இருந்த அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி 1.5 லட்சம் பீப்பாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.
5.75 லட்சம் பீப்பாய் அமெரிக்க எண்ணெய் இறக்குமதி
அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு 5.25 லட்சம் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது. உலக எண்ணெய் வர்த்தகத்தை ஆய்வு செய்யும் நிறுவனம், இந்தியாவுக்கு அமெரிக்க ஏற்றுமதி அதிகரித்துள்ளது பற்றி தகவல் தெரிவித்தது.
