Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

2000 கிலோ யுரேனியம் வைத்துள்ள வடகொரியா: 47 அணுகுண்டுகளை தயாரிக்க முடியும் என தென்கொரியா குற்றசாட்டு

தென்கொரியா: வடகொரியாவிடம் 2000 கிலோ யுரேனியம் இருப்பதாகவும் அவைகளை வைத்து 47 அணுகுண்டுகளை தயாரிக்க முடியும் என தென்கொரியா குற்றசாட்டு வைத்துள்ளது. வடகொரியா மொத்தம் 4 யுரேனியம் செரியூட்டல் நிலையங்களை இயக்கி வருவதாக தென் கொரிய உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பியோங்கியாங்கிளிருந்து வடக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தளம் உட்பட 4 நிலையங்களில் யுரேனியம் செறிவூட்டல் மையல்விளக்குகள் தினமும் இயங்கி வருவதாகவும், வடகொரியாவின் அணுசக்தி திட்டத்தை நிறுத்த வேண்டியதன் அவசரத்தை வலியுறுத்தியும் தென் கொரியாவின் அமைச்சர் சுன் டுங் யூங் தெரிவித்துள்ளார். வடகொரிய அதிபர் தனது நாட்டின் அணுஆயுத திட்டத்தை விரைவாக விரிவுபடுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முயற்சிகளுக்கு பதில் அளிக்கும் விதமாக ஆயுதங்களை ஒரு போதும் பேச்சுவார்த்தை புள்ளியாக மாற்ற மாட்டேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடகொரியா 2000 கிலோ கிராம் அதிகம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாக மதிப்பீட்டை உளவுத்துறையின் தலைமை அடிப்படையில் கூறப்பட்டது என்று சுன் கூறியிருந்தார். 2018ம் ஆண்டில் யூன் பியூன் வளாகத்தை முன்னர் பார்வையிட்ட அணு இயற்பியலாளர் உட்பட ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக அறிஞர்கள் வடகொரியாவின் சுமார் 250 முதல் 500 கிலோ கிராம் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாகவும் இது 25 முதல் 30 அணு சாதனங்களுக்கு போதுமானது என்று கூறினர். அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் அல்லது புளுட்டோனியத்தை பயன்படுத்தி அணு ஆயுதங்களை உருவாக்க முடியும். மேலும், வடகொரியா இத்தகைய உற்பத்தி செய்யும் வசதிகளை கொண்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. கடந்த ஆண்டு வடகொரியா யுரேனியம் செறிவூட்டல் வசதி என்று கூறப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டது. புகைப்படங்களில் உள்ள இட மற்றும் பிற விவரங்கள் தெரியவில்லை. 2006ம் ஆண்டு தனது முதல் அணுஆயுத சோதனையை நடத்தி ஐக்கிய நாடுகள் சபையின் கடுமையான தடைகளுக்கு உள்ளாகி உள்ள வடகொரியா அதன் செறிவூட்டல் ஆலைகள் பற்றிய விவரங்களை ஒரு போதும் பகிரங்கமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.