மவ்: உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரேராம் திரிபாதி(58).குல்குரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலை கழகத்தின் துணை வேந்தர். அவரது மனைவி பாதாமி தேவி(56) இவர்கள் இருவரும் நேற்று வாரணாசியில் இருந்து தங்கள் கிராமத்துக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர்.
வாரணாசி நெடுஞ்சாலையில் உள்ள குஸ்மா கிராமத்தில் கார் வந்தபோது, அங்கு சாலையில் நின்றிருந்த டிரெய்லர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஹரேராம் திரிபாதி, அவரது மனைவி பாதாமி தேவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.