கன்னோஜ்: உபியில் முஸ்லிம்கள் ஊர்வலத்தில் பாலஸ்தீன கொடியை எடுத்து சென்ற வாலிபர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். உபி மாநிலம் கன்னோஜின் குர்சஹாய்கஞ்சில் நேற்றுமுன்தினம் முஸ்லிம்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது ஊர்வலத்தில் இரண்டு பேர் பாலஸ்தீன கொடியை கையில் ஏந்தி சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சோயிப்(20) மற்றும் 16வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் சிறார் இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். இது குறித்து கன்னோஜ் போலீஸ் அதிகாரி அபிஷேக் பிரதாப் அஜெயா நேற்று கூறுகையில், இரண்டு குழுக்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்த முயற்சித்தாக இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இரண்டு பேரும் எங்கிருந்து பாலஸ்தீன கொடியை வாங்கி வந்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.