Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உபியில் திருமண நிதியுதவி திட்டத்தில் மீண்டும் மோசடி; மாப்பிள்ளை வராததால் மைத்துனருடன் திருமண சடங்குகள் செய்த பெண்

ஜான்சி: உபியில் திருமண நிதியுதவி திட்டத்தில் மீண்டும் ஒரு மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உபியில், ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ.51 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தியுள்ளார். கடந்த ஜனவரியில் பல்லியா மாவட்டத்தில்,அரசின் நிதியுதவிடன் 200 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடந்தது. இதில், ஏற்கனவே திருமணம் ஆனவர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் மணப்பெண்கள் தனக்குத் தானே மாலை அணிவித்து திருமணம் செய்துகொண்ட வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவின. இதையடுத்து அரசின் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இந்நிலையில்,ஜான்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 132 ஏழை பெண்களுக்கு திருமணம் நடந்தது. இதில,குஷி என்ற பெண்ணுக்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு மணமகனுடன் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், மாப்பிள்ளை அங்கு வராததால் பெண்ணின் மைத்துனருடன் திருமண சடங்குகள் செய்துள்ளனர். அரசின் நிதியுதவியை பெறுவதற்காக இவ்வாறு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இது குறித்து விசாரிக்கப்படும் என்றும் தவறு நடந்திருப்பது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி லலிதா யாதவ் தெரிவித்தார்.