யுஎஸ் ஓபனுக்கு பிறகு வீரர்களுக்கான தரவரிசையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முன்னாள் நெம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் 3 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார். அரையிறுதி வரை முன்னேறி அசத்திய கனடா வீரர் ஃபெலிக்ஸ் அகர் 14 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை எட்டியுள்ளார்.
மகளிருக்கான உலக தர வரிசையில், யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற அரீனா சபலென்கா (பெலாரஸ்) 11,225 புள்ளிகளுடனும், இகா ஸ்வியடெக் (போலந்து) 7933 புள்ளிகளுடனும், கோகோ காஃப் (அமெரிக்கா) 7874 புள்ளிகளுடனும் முறையே முதல் 3 இடங்களில் நீடிக்கின்றனர். இறுதி ஆட்டம் வரை முன்னேறிய அமெரிக்காவின் அமண்டா அனிஸிமோவா 5 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 4வது இடத்தை பிடித்திருக்கிறார்.