Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அதிகாரப்பூர்வமற்ற 2வது டெஸ்ட் ஆஸி ஏ 242 ரன் முன்னிலை: இந்தியா ஏ 194க்கு ஆல் அவுட்

லக்னோ: இந்தியா ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற 2வது டெஸ்டில், ஆஸி ஏ அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 16 ரன் எடுத்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸி ஏ அணி, இந்தியா ஏ அணியுடன் 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. முதல் போட்டி டிரா ஆன நிலையில் 2வது போட்டி கடந்த 23ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சிங் ஆஸ்திரேலியா 420 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பின் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 194 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 75 ரன் எடுத்தார். ஆஸி தரப்பில் ஹென்றி தார்ன்டன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை, 2வது நாளான நேற்று பிற்பாதியில் ஆடியது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 3 விக்கெட் இழப்புக்கு 16 ரன் எடுத்திருந்தது. கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸி, 242 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.