சென்னை: பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்ந்தெடுப்பற்கான சட்ட திருத்த முன் வடிவைமனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேரவையில் அறிமுகம் செய்தார். அதில் கூறி இருப்பதாவது: மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், சட்டபூர்வமான வாரியங்கள் மற்றும் அதிகார அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், இதை விரிவுபடுத்த கூடிய வகையில் மாநிலத்தில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் ஆள் சேர்ப்பதற்கான கூடுதல் செயற்பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகவும் திறமையான தொழில்முறை மற்றும் வெளிப்படையான ஆள் சேர்ப்பு செயல்முறை உதவி செய்யப்படும். மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநிலத்தின் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
+
Advertisement