தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று அளித்த பேட்டி: கட்சியின் 21ம் ஆண்டு நிறுவன நாள் செப்டம்பர் 14ம் தேதி மணப்பாறையில் தலைவர் விஜயகாந்தின் வயதின் எண்ணிக்கையை வைத்து 73 அடி உயரத்தில் கொடியேற்றுகிறோம். செங்கோட்டையன் கெடு விதித்திருப்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அது அதிமுகவினர் கூடிப் பேசி எடுக்க வேண்டிய முடிவு. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது தான் தமிழ் மொழியில் உள்ள பழமொழி. எல்லாரும் ஒற்றுமையாக இருப்பது வரவேற்கக்கூடிய விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.