புதுடெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு, அஞ்சல் பொருட்களுக்கான சுங்க வரி விதிப்பிலும் மாற்றம் செய்தது. இதனால் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அமெரிக்காவுக்கான அனைத்து வகையான அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்தது. இந்நிலையில், இன்று முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவையை மீண்டும் தொடங்குவதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
+
Advertisement