Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனித்துவமான சுவை, மருத்துவ குணம் கொண்டது 500 ஆண்டு பழமையான சிவன் சம்பா அரிசி ரகம்

*வயலில் நாற்று பறிப்பு பணி மும்முரம்

திருத்துறைப்பூண்டி : தனித்துவமான சுவை, மருத்துவ குணம் கொண்டது, 500 ஆண்டு பழமையான சிவன் சம்பா அரிசி ரகம். இந்த ரக திருத்துறைப்பூண்டி வயலில் நாற்று பறித்து நடுவதற்கான பணிகள் நடைபெறுகிறது.திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகர் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி பொன்முடி என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக மேலமருதூர் பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

இந்தாண்டு அதில் நடுவதற்காக சம்பா பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, ரத்தசாலி, சிவன் சம்பா ஆகிய நெல் ரகங்களை துளசாபுரம் அருகே மகாராஜபுரம் கிராமத்தில் நாற்று விட்டிருந்தார். அதனை பெண் தொழிலாளர்கள் மூலம் நாற்று பறித்து நடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நெல் ரகங்கள் குறித்து விவசாயி பொன்முடி கூறுகையில்,சிவன் சம்பா என்பது தமிழ்நாட்டின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். இது அதன் மருத்துவ குணங்கள், தனித்துவமான சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்காக அறியப்படுகிறது. குறிப்பாக இரும்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இதில் நிறைந்துள்ளன. இது பாரம்பரிய வெள்ளை அரிசி வகைகளில் ஒன்றாகும் மற்றும் சன்ன ரக அரிசியாக கருதப்படுகிறது.

இது தமிழ்நாட்டின் பழமையான நெல் வகைகளில் ஒன்றாகும், இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நெல் இயற்கையான முறைகளிலும், ரசாயன உரங்கள் இன்றியும் பயிரிடுகிறோம்.

இது சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது, இதன் சாகுபடி காலம் 130-135 நாட்கள் ஆகும்.ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்துதல், சிறந்த செரிமானம், நீரிழிவு மேலாண்மை, இரத்த சோகையைத் தடுத்தல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல். இது குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டது, இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

தூய மல்லி என்பது ஒரு பாரம்பரிய நெல் வகையாகும், இது வெள்ளை நிற அரிசியையும், நல்ல மணம் கொண்டதையும் கொண்டுள்ளது. இது 130 முதல் 140 நாட்களில் விளையக்கூடியது மற்றும் பூச்சி, நோய்களை எதிர்க்கும் தன்மை கொண்டது.

இந்த ரகம் தஞ்சாவூர் மற்றும் சேலம் போன்ற பகுதிகளில் பிரபலமாக உள்ளது. பால் வெள்ளை நிறத்திலும், மெல்லியதாகவும், மனம் மிக்கதாகவும் இருக்கும். இது ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். இது நடுத்தர குட்டைப்பயிராக வளரும்.

ஏக்கருக்கு சுமார் 15 மூட்டைகள் வரை மகசூல் தரக்கூடியது. 130 முதல் 140 நாட்கள் வரை பயிர் செய்ய ஆகும். நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து மிகுந்து காணப்படுகிறது.

அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.மேலும், திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகர் பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி கூறுகையில், சம்பா பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, ரத்தசாலி, சிவன் சம்பா ஆகிய நெல் ரகங்களை துளசாபுரம் அருகே மகாராஜபுரம் கிராமத்தில் நாற்று விட்டிருந்தார். அதனை பெண் தொழிலாளர்கள் மூலம் நாற்று பறித்து நடுவதற்கான பணிகள் நடைபெறுகிறது என்று குறிப்பிடத்தக்கது.