Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உணவு பொருட்களை பதுக்கக்கூடாது: வணிகர்களுக்கு ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை

புதுடெல்லி: அத்தியாவசிய உணவு பொருட்களை யாரும் பதுக்கக்கூடாது என்று வணிகர்களுக்கு ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி எச்சரித்துள்ளார். ஒன்றிய உணவு அமைச்சர் பிரலாத் ஜோஷி சமூக வலைதளத்தில் பதிவிடுகையில் நாட்டின் சில பகுதிகளில், பரவி வரும் வதந்தியால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை சேகரிப்பதற்கு மக்கள் அவசரம் காட்டுகின்றனர். நாட்டில் உணவுப் பொருட்கள் இருப்பு தொடர்பான பிரசார செய்திகளை நம்ப வேண்டாம். எங்களிடம் போதுமான உணவுப் பொருட்கள் இருப்பு உள்ளது.

இது தேவையான அளவை விட மிக அதிகம். இதுபோன்ற செய்திகளில் கவனம் செலுத்த வேண்டாம். அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அல்லது வணிக நிறுவனங்கள் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஒத்துழைக்க அறிவுறுத்தப்படுகின்றனர். பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.