பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராகப் பேசியதற்காக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராஜ் குமார் சிங் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக பாஜவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதேபோன்ற நடவடிக்கையில், கட்சி எம்.எல்.சி. அசோக் குமார் அகர்வால் மற்றும் அவரது மனைவி உஷா அகர்வால் ஆகியோரையும் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. இந்தியா கூட்டணியில் விகாஷீல் இன்சான் கட்சியின் சார்பில் கதிஹார் தொகுதியில் போட்டியிடும் தங்கள் மகன் சவுரப்பிற்காக, தற்போதைய பாஜ எம்.எல்.ஏ.வும் முன்னாள் துணை முதல்வருமான தர்கீஷோர் பிரசாத்துக்கு எதிராக அவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
+
Advertisement


