Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் 2 விருதுகள் வழங்கி பாராட்டு

ஹரியானா: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசின் 2 விருதுகள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருது வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு நகர்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் (MoHUA) இரண்டு முக்கிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பல்முனை ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ இரயில் (Metro Rail with the Best Multimodal Integration) என்ற பிரிவின் கீழ், நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருது (Award of Excellence in Urban Transport). சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ இரயில் (Metro Rail with the Best Passenger Services and Satisfaction ) பிரிவில், நகர்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழ் (Commendation Award in Urban Transport) பெற்றுள்ளது.

இந்த விருதுகள், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நவம்பர் 9, 2025 நடைபெற்ற நகர்ப்புற போக்குவரத்து இந்தியா (UMI) மாநாடு 2025-ன் நிறைவு விழாவில் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை ஒன்றிய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் அவர்களும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் தோக்கன் சாகு அவர்களும் வழங்கினர்.

இந்த விருதுகளை, தமிழ்நாடு அரசின் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (சிறப்பு முயற்சிகள் துறை) டாக்டர் கே. கோபால், மற்றும் தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம். ஏ. சித்திக், ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த பாராட்டு, சென்னை மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற போக்குவரத்தை வழங்குவதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.