சென்னை: மீனவர்கள் கைது விவகாரத்தில் ஓரவஞ்சனையுடன் செயல்படும் ஒன்றிய அரசைக் கண்டித்து தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர கதியில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறுத்தக்கோரி தவெக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்று சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
+
Advertisement
