ஒன்றிய அரசின் வரி பகிர்வு தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி: உ.பிக்கு ரூ.18,227 கோடி பீகாருக்கு ரூ.10,219 கோடி
புதுடெல்லி: ஒன்றிய அரசின் வரி பகிர்வு அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ரூ.4,144 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உபிக்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு முன்கூட்டியே தவணை வரி பகிர்வை ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்து வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 28 மாநிலங்களுக்கு ரூ.1,01,603 கோடி மதிப்பிலான கூடுதல் வரி மீதான நிதியை நேற்று வெளியிட்டுள்ளது. பொதுவாக, மாதாந்திர வரி மீதான நிதி ஒவ்வொரு மாதத்திலும் 10ம் தேதி வழங்கப்படும். ஆனால் இந்த முறை பண்டிகைக்கால செலவினை கருத்தில் கொண்டு, அக்டோபர் 10ம் தேதிக்கு முன்பாகவே, ஒரு முன்னுரிமை தவணையாக இந்த தொகை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு பட்டியலில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில் 8வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மேலும் ஒன்றிய அரசு பண்டிகை காலத்தில் மாநிலங்களின் நிதிச்சுமையை குறைத்து, நலத்திட்டங்களை விரைவில் நிறைவேற்றும் வகையில் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் இந்த முடிவு, மாநில அரசுகளின் நலத்திட்ட அமலாக்கம் மற்றும் அத்தியாவசிய செலவீடு ஆகியவற்றை ஊக்குவிக்க உதவும் என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8வது இடத்தில் தமிழ்நாடு
1. உத்தரபிரதேசம் ரூ.18,227 கோடி
2. பீகார் ரூ.10,219 கோடி
3. மத்தியபிரதேசம் ரூ.7,976 கோடி
4. மேற்குவங்கம் ரூ.7,644 கோடி
5. மகாராஷ்டிரா ரூ. 6,418 கோடி
6. ராஜஸ்தான் ரூ. 6,123 கோடி
7. ஒடிசா ரூ.4,601 கோடி
8. தமிழ்நாடு ரூ.4,144 கோடி
9. ஆந்திரா ரூ.4,112 கோடி
10. கர்நாடகா ரூ. 3705 கோடி
11. குஜராத் ரூ. 3,534 கோடி
12. சட்டீஸ்கர் ரூ.3,462 கோடி
13. ஜார்க்கண்ட் ரூ.3360 கோடி
14. அசாம் ரூ.3,178 கோடி
15. தெலங்கானா ரூ.2,136 கோடி
16. கேரளா ரூ.1,956 கோடி
17. பஞ்சாப் ரூ.1836 கோடி
18. அருணாச்சல் ரூ.1785 கோடி
19. உத்தரகாண்ட் ரூ.1,136 கோடி
20. அரியானா ரூ.1,111 கோடி
21. இமாச்சல் ரூ.843 கோடி
22. மேகாலயா ரூ. 779 கோடி
23. மணிப்பூர் ரூ.727 கோடி
24. திரிபுரா ரூ.719 கோடி
25.நாகாலாந்து ரூ.578 கோடி
26. மிசோரம் ரூ.508 கோடி
27. சிக்கிம் ரூ.394 கோடி
28. கோவா ரூ.392 கோடி