பொது சுகாதாரத் திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: பொது சுகாதாரத் திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு வைத்துள்ளார். அனைத்து மாநிலங்களின் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஒன்றிய அரசு தவறிவிட்டது. அனைத்து தரப்பு மக்களின் நலன்களை காக்கும் வகையில் தமிழ்நாட்டில் பொது சுகாதாரத் திட்டம் உள்ளது. தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை ஒன்றிய அரசின் என்.எம்.சி. சட்டம் அனுமதிக்கிறது. ஒன்றிய அரசின் என்.எம்.சி. சட்டம், கல்வியை வணிகமயமாக்க தூண்டுகிறது.
நீட், நெக்ஸ்ட் போன்ற நுழைவுத் தேர்வுகள் சமூக நீதிக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது. நீட், நெக்ஸ்ட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட், நெக்ஸ்ட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மூலமாகவும் ஒன்றிய அரசிடம் அதிகாரம் குவிக்கப்படுகிறது. "அனைத்து மாநிலங்களும் தங்களது சுகாதார இலக்குகளை அடைய ஒன்றிய அரசு உதவி செய்ய வேண்டும்