கனிம எண்ணெய் திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு.
டெல்லி: பெட்ரோலிய துறை வழங்கும் ஒரே உரிமத்தின் கீழ் அனைத்து வகையான கனிம எண்ணெய் திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில், புதிய விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு.
ஹைட்ரோகார்பன் உரிமம் என்பது பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை ஆய்வு செய்யவும், எடுக்கவும் ஒன்றிய அரசால் வழங்கப்படும் அனுமதி ஆகும். தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் இந்த உரிமங்கள் குறித்து ஒன்றிய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், சுற்றுச்சூழல் மற்றும் மாநில அரசின் அனுமதி இல்லாததால், தமிழக அரசு இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது,
காவிரி டெல்டா போன்ற வேளாண் மண்டலங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பது நிலத்தடி நீர் மட்டத்தைக் குறைக்கும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும். ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகளில் ஹைட்ரோகார்பன் இருப்பு உள்ளதாகக் கண்டறிந்து, ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது. இது பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்ற ஹைட்ரோகார்பன்களை பூமிக்கு அடியில் இருந்து எடுக்க ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் வழங்கும் ஒரு வகையான அனுமதி (licence) அல்லது ஒப்பந்தம் ஆகும்.
பெட்ரோலிய துறை வழங்கும் ஒரே உரிமத்தின் கீழ் அனைத்து வகையான கனிம எண்ணெய் திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில், புதிய விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு. அதில், விண்ணப்பித்த 180 நாட்களில் உரிமம் வழங்க வேண்டும் என்றும், 30 ஆண்டுகள் வரை நீண்டகால உரிமங்கள் வழங்கலாம் என்றும், அதனை பொருளாதார ஆயுள் காலம் முடியும் வரை மேலும் நீட்டிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


