டெல்லி: 20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் வயதை பொறுத்து தகுதி சான்றிதழ் கட்டணம் வசூலிக்கப்படும். 10-15 ஆண்டுகள், 15-20 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேல் என 3 பிரிவுகளாக வாகனங்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மாற்றம் 2 வீலர், 3 வீலர், குவார்டி சைக்கில், இலகு ரக கார்கள், மிடியம் மற்றும் ஹெவி வாகனங்களுக்கு பொருந்தும். குறிப்பாக ஹெவி வாகனங்களுக்கு கான பிட்னஸ் சான்று கட்டணம் தான் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியது. கனரக சரக்கு லாரிகள், பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம் ரூ.3,500லிருந்து ரூ.25,000 ஆக உயர்ந்துள்ளது. நடுத்தர வர்த்தக வாகனங்களுக்கு ரூ.20,000 ஆகவும், இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு ரூ.15,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


