கோண்டா உபி மன்காபூரில் பெண் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்ததாக ஒன்றிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதியாததால் அந்த பெண்ணின் கணவர் எம்பி- எம்எல்ஏ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றத்தை நாடினார்.ஒன்றிய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
+
Advertisement