Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழக காங்கிரசார் கருப்பு புறாவை பறக்க விட்டு கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை இறுதி செய்வதற்காக அவர் வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டியும், நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி அவதூறாக பேசி இருப்பதாக கண்டனம் தெரிவித்தும், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் சார்பில் கருப்புக் ெகாடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.

அதன்படி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், மயிலாப்பூரில் டாக்டர் அம்பேத்கர் பாலம் (சிட்டி சென்டர் அருகில்) கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவே திரும்பிப் போ என்றும் ஒன்றிய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் கருப்பு புறாவை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கிராம கமிட்டி சீரமைப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், அசன் மவுலானா எம்எல்ஏ, துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், கோபண்ணா, பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், காண்டீபன், டி.செல்வம், அமைப்பு செயலாளர் ராம் மோகன், பெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர் தாம்பரம் நாராயணன், ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர்கள் துறைமுகம் ரவிராஜ். சி.ஜே.தங்கராஜ், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன், ஜெ‌.டில்லி பாபு, மற்றும் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.எம்.குமார், டி.அய்யம்பெருமாள், மன்சூர் அலிகான், திருவான்மியூர் மனோகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.