Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

i) மெக்கானிக்கல்: 8 இடங்கள் (பொது-4, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியும், 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

ii) கம்ப்யூட்டர் சயின்ஸ்: 6 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1) தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சியும் 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

iii) எலக்ட்ரானிக்ஸ்: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-3). தகுதி: 60% மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

iv) பயோ இன்ஜினியரிங்/பயோ கெமிஸ்டிரி/பயோ டெக்னாலஜி: 1 இடம் (பொது). தகுதி: பயோ இன்ஜினியரிங்/ பயோ கெமிஸ்டிரி/ பயோ டெக்னாலஜி பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

v) வேதியியல்: 1 இடம் (பொது). தகுதி: வேதியியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

vi) சிவில் இன்ஜினியரிங்: 1 இடம் (பொது). தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 26க்குள். சம்பளம்: ரூ.35,400- 1,12,400.

கட்டணம்: ரூ.590/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

டிரேடு தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

https://www.csio.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.08.2025.