கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல் முருகன் நேரில் ஆறுதல்!!
கரூர் : கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல் முருகன் ஆகியோர் நேரில் ஆறுதல் கூறினர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர். கரூரில் விஜய் பரப்புரையின்போது நெரிசல் ஏற்பட்ட இடத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்.