ஆளுநர்களின் அதிகாரம்... சுதந்திரத்திற்கு முந்தைய நடைமுறை, தொடர வேண்டும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
டெல்லி : சில மாநிலங்கள் ஆளுநர்களின் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்ய விரும்புகின்றன என்று ஒன்றிய அமைச்சர் கல்வி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், "வரலாற்று ரீதியாக, ஆளுநர்கள் அந்தந்த மாநிலங்களின் கல்வி நிறுவனங்களின் தலைவர்களாக இருந்தனர். சுதந்திரத்திற்கு முந்தைய இந்த நடைமுறை, தொடர வேண்டும். ஆளுநர் பதவி, ஒரு அரசியல் சார்பற்ற பதவி, அரசியலமைப்பின் பாதுகாவலர்கள்,"என கூறினார்.