ஒன்றிய அரசின் நுண்ணறிவு பிரிவில் பல்நோக்கு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மொத்த பணியிடங்கள்: 362.
சம்பளம்: ரூ.18,000- ரூ.56,900.
வயது: 14.12.2025 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், விதவைகளுக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிடச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது, ஒபிசியினர் மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.650/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு ரூ.550/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, குவாண்டிடேட்டிவ் அப்டிடியூட், ஆங்கில அறிவு, நியூமரிக்கல், லாஜிக்கல் ரீசனிங் ஏபிலிட்டி ஆகிய பாடங்களில் ஆப்ஜக்டிவ் டைப் கேள்விகளும், ஆங்கிலத்தில் ஆப்ஜக்டிவ் கேள்விகள் தவிர விரிவான கேள்விகளும் கேட்கப்படும்.
சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும். www.mha.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2025.


