ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃபு வாரிய சட்ட விதிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!!
டெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃபு வாரிய சட்ட விதிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறாரா? என்பதை முடிவு செய்வதற்கான விதிகளை மாநில அரசுகள் வகுக்கம் வரை முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க முழு முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வக்ஃபு வாரியம் தொடங்க ஒருவர் குறைந்தபட்சம் 5 ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நிபந்தனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.