பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்.
மொத்த காலியிடங்கள்: 600.
தகுதி: சிவில்/எலக்ட்ரிக்கல்/இன்ஸ்ட்ருமென்டேஷன்/ மெக்கானிக்கல்/ மெட்டலர்ஜி/ கெமிக்கல் டெக்னாலஜி ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகள் அல்லது அதற்கு இணையான பொறியியல் பாடப்பிரிவுகளில் முழு நேர இன்ஜினியரிங் படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கெமிஸ்டிரி பிரிவுக்கு பிஎஸ்சி கெமிஸ்டிரி படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வு நவ.23ம் தேதி டெல்லி/குருகிராம்/மும்பை/பெங்களூரு/கொல்கத்தா/கவுகாத்தி/புவனேஸ்வர்/ஹைதராபாத்/பிலாய்/சென்னை/ ராஞ்சி/அகமதாபாத்/பாட்னா/லக்னோ.
சம்பளம்: ரூ.29,735.
வயது: 12.11.2025 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும்.
www.rites.com என்ற இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.11.2025.

