ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணிக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர்.30 பதவிக்காலம் முடியும் நிலையில் வெங்கட்ரமணிக்கு 2ஆண்டு பதவி நீட்டிக்கப்பட்டது. 2022ம் ஆண்டு ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கட்ரமணி நியமிக்கப்பட்டார். புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கட்ரமணி இந்திய சட்ட ஆணைய உறுப்பினராக 2010, 2013ல் பதவி வகித்தார். ஒன்றிய அரசின் பரிந்துரையை ஏற்று தலைமை வழக்கறிஞர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
+
Advertisement