1. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: 6 இடங்கள் (மெக்கானிக்கல்-2, எலக்ட்ரிக்கல்-2, மெட்டலர்ஜிக்கல்-2). வயது: 7.12.25 அன்று 21 முதல் 25க்குள். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/மெட்டலர்ஜிக்கல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ.,
2. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: 9 இடங்கள் (மெக்கானிக்கல்-3, எலக்ட்ரிக்கல்-3, மெட்டலர்ஜிக்கல்-3). வயது: 7.12.25 அன்று 18 முதல் 22க்குள். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/மெட்டலர்ஜிக்கல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் மூன்றாண்டு டிப்ளமோ.
வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்த இரு பிரிவினருக்கு ஓராண்டு அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது டிப்ளமோ அப்ரன்டிசுக்கு மாதம் ரூ.10,900ம், இன்ஜினியரிங் அப்ரன்டிசுக்கு மாதம் ரூ.12,300ம் உதவித் தொகையாக வழங்கப்படும்.www.nats.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.12.2025.

