ஐ.நா. விருது பெற்றுள்ள கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: CHAMPIONS OF THE EARTH விருதினை பெற்றுள்ள கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரித்து வருதல், அருகி வரும் அரிய உயிரினங்களைக் காத்தல், Plastic பயன்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நமது அரசின் சீரிய முயற்சிகள் மென்மேலும் சிறக்கும் வகையில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.


