Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஐ.நா. வருகையின் போது டிரம்புக்கு 3 முறை நாச வேலை நடந்ததா? விசாரிக்க உத்தரவு

வாஷிங்டன்: ஐ.நா. வருகையின் போது 3 முறை நாசவேலை நடந்தது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச முயன்றபோது மைக் வேலை செய்யவில்லை. மேடைக்கு செல்ல முயன்றபோது நகரும் படிக்கட்டுகள் வேலை செய்யவில்லை. அதேபோல டெலிபிராம்ப்டரும் வேலை செய்யவில்லை. இதையெல்லாம் தனக்கு எதிரான சதி டிரம்ப் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று ஒரு அவமானம் நடந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை நாசவேலை நடந்தது. முதலாவதாக உரையாற்ற மாடிக்கு செல்லும் எஸ்கலேட்டர் செயலிழந்தது. நானும், மெலனியாவும் கைப்பிடியை இறுக்கமாக பிடித்து கொண்டோம். இல்லையென்றால் பேரழிவாக இருந்திருக்கும். இது முற்றிலும் நாசவேலை. எஸ்கலேட்டரை அணைத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

பின்னர், உலகம் முழுவதும் லைவில் கோடிக்கணக்கான மக்கள் மற்றும் அரங்கில் முக்கியமான தலைவர்கள் இருந்த கூட்டத்தின்முன் நான் நின்றபோது, ​​எனது டெலிப்ராம்ப்டர் வேலை செய்யவில்லை. அது கடுமையான இருட்டாக இருந்தது. உடனடியாக எனக்குள் நினைத்து கொண்டேன். என்னவென்றால், ‘ஐயோ, முதலில் எஸ்கலேட்டர் நிகழ்வு, இப்போது டெலிப்ராம்ப்டர். இது என்ன மாதிரியான இடம்? நான் டெலிப்ராம்ப்டர் இல்லாமல் ஒரு உரையை நிகழ்த்த தொடங்கினேன். நல்ல செய்தி என்னவென்றால், உரைக்கு அருமையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. நான் செய்ததை மிக சிலரே செய்திருக்க முடியும் என்பதை அவர்கள் பாராட்டியிருக்கலாம். 3வதாக, உரையை நிகழ்த்திய பிறகு, அந்த ஆடிட்டோரியத்தில் ஒலி முற்றிலுமாக அணைந்து விட்டது. உரையின் முடிவில் நான் முதலில் பார்த்த நபர் மெலனியா, அவர் முன்னால் அமர்ந்திருந்தார்.

அவரிடம், ‘நான் எப்படி பேசினேன்?’ என்று கேட்டதற்கு, ‘நீங்கள் சொன்ன ஒரு வார்த்தையையும் என்னால் கேட்க முடியவில்லை’ என்றாள். இது தற்செயல் நிகழ்வு அல்ல. இது நாசவேலை. அவர்கள், தங்களை பற்றி வெட்கப்பட வேண்டும். இந்த கடிதத்தின் நகலை நான் பொதுச்செயலாளருக்கு அனுப்புகிறேன். உடனடியாக விசாரணையை கோருகிறேன். ஐக்கிய நாடுகள் சபையால் வேலையை செய்ய முடியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. எஸ்கலேட்டரில் உள்ள அவசர நிறுத்த பொத்தானை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும். இதுகுறித்து ரகசிய போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.